ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது ?
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மேலாரணி மதுரா, தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர் .
இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சம்பவ இடத்திற்க்கு வந்த போளூர் டி.எஸ்.பி. குணசேகரன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போளூர் கல்வி அதிகாரிக்கு டி.எஸ்.பி.குணசேகரன் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் கல்விதுறை அதிகாரிகள் தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினர். பின் தலைமையாசிரியர் மீது குற்றம் உறுதியானதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து தலைமையாசிரியர் காளியப்பனை கைது செய்தார். இந்த சம்பவம் கலசபாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.