நேர்காணல் திடீர் நிறுத்தம்.. விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்..!

நேர்காணல் திடீர் நிறுத்தம்.. விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்..!

நேர்காணல் திடீர் நிறுத்தம்.. விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்..!
X

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை, ஈரோடு, புதுக்கோட்டையில் நடைபெற இருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணிக்கு மதுரையில் 47 இடங்களுக்கு 8,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதில் 6,675 பேர் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதை அறியாமல் ஏராளமானோர் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதேபோல், புதுக்கோட்டையிலும் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார். அதை அறியாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்த நிலையில், நேர்காணல் நடக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோட்டிலும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நேர்காணலுக்கு வந்தவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மண்டல இணை இயக்குநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story
Share it