1. Home
  2. தமிழ்நாடு

கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ தொகை உயர்வதால் அதிர்ச்சி !!

கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ தொகை உயர்வதால் அதிர்ச்சி !!


வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடந்த 30 நாட்களில் 2ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது.

அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.20% ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. இஎம்ஐ தொகை உயர்வதால் அதிர்ச்சி !!

இதுபோல் ஒரு மாதம், மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 10 பிபிஎஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது.

அதுபோலவே இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1% அதிகரித்து 7.40% ஆகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.50% ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும்.இதன்காரணமாக, மேற்கண்ட வங்கிகளில் தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இஎம்ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

newstm.in

Trending News

Latest News

You May Like