சக வீரரை கரம் பிடிக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை..!

சக வீரரை கரம் பிடிக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை..!

சக வீரரை கரம் பிடிக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை..!
X
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர், கொரோனா காலத்தில் தனது சகோதரி மற்றும் தாயார் என இருவரையும் அடுத்தடுத்து இழந்தார். இதனால், தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் அவர், தனது நண்பரான கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்ய உள்ளார்.
Indian Women Cricketer Veda And Arjun Announced Their Engagement On Social  Media - Latest Cricket News of today India
இதுகுறித்து அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், வேதா கிருஷ்ணமூர்த்தியின் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார். பின்னர் அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு, தனது காதலை அவர் ஏற்றுக் கொண்டார் என அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Next Story
Share it