சர்ச்சைக்கு பிறகு இளையராஜாவின் முதல் ட்வீட்!!

சர்ச்சைக்கு பிறகு இளையராஜாவின் முதல் ட்வீட்!!

சர்ச்சைக்கு பிறகு இளையராஜாவின் முதல் ட்வீட்!!
X

பிரதமர் மோடிக்கு ஆதரவாக இசைஞானி இளையராஜா கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு பிறகு ட்விட்டரில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார் இளையராஜா.

புத்தகம் ஒன்றின் முன்னுரையில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனவும் கூறியிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் முன்னுரை கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.

Ilayaraja 1

இளையராஜாவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் அனல் பறந்தது. இளையராஜாவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அரசியில் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போதைய ட்விட்டில், ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், “நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவேஎன்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த ட்வீட்க்கும் கலவையான கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it