பொதுத் தேர்வில் ‘பிட்’ அடித்தால்.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..!

பொதுத் தேர்வில் ‘பிட்’ அடித்தால்.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..!

பொதுத் தேர்வில் ‘பிட்’ அடித்தால்.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை..!
X

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் லீக் ஆன நிலையில், தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்வு கண்காணிப்பு பணிக்கு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் இரண்டு முறை தேர்வு எழுத முடியாது. வினாத்தாள் லீக் செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story
Share it