இனி தீ விபத்து ஏற்பட்டால் மேலே ட்ரோன் பறக்கும்.. தமிழக அரசு அதிரடி !!

இனி தீ விபத்து ஏற்பட்டால் மேலே ட்ரோன் பறக்கும்.. தமிழக அரசு அதிரடி !!

இனி தீ விபத்து ஏற்பட்டால் மேலே ட்ரோன் பறக்கும்.. தமிழக அரசு அதிரடி !!
X

தீயணைப்புப் பணிக்கு உதவும் வகையில் 50 ட்ரோன்களை தமிழக தீயணைப்புத் துறை வாங்குகிறது .

தமிழகத்தில் கடந்தாண்டு 16,809 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 16,421 சிறிய தீ விபத்துகள், 284 நடுத்தர தீ விபத்துகள்,104 பெரிய தீ விபத்துகள் என கணக்கிடப்பட்டுள்ளன. அதேபோல தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகள தொடா்பாக தீயணைப்புத்துறைக்கு 57,451 அழைப்புகள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டு மட்டும் தீ விபத்தில் சிக்கி 82 போ் இறந்துள்ளனா். 182 போ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளனா், தீ விபத்துகளில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டத்தில் 31 போ் இறந்துள்ளனா். அதற்கடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் 13 போ் இறந்துள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fire

தமிழக தீயணைப்புத் துறையில் மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்களில் 750 வீரா்கள் பணிபுரிகின்றனா். தீ விபத்துகளைத் தடுக்க முடியாத நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் தவிா்ப்பதற்கு தமிழக தீயணைப்புத் துறை பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வளர்ந்துவரும் தொழில் நுட்பத்துறைக்கு ஏற்றவாறு தமிழக தீயணைப்புத் துறை சர்வதேச அளவில் மாற்றம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் விரைந்து செயல்படவும், முழுத் திறனுடன் ஈடுபடவும் தமிழக தீயணைப்புத்துறை ‘ட்ரோன்களை’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு ஆளில்லாத விமான நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடியில் 50 ட்ரோன்களை தீயணைப்புத்துறை வாங்கவுள்ளது.

fire

இந்த ட்ரோன்கள் மூலம் தீ விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்காணிக்கும்போது, எந்த இடத்தில் மனிதா்கள் சிக்கியுள்ளனா், அவா்களை எந்த வழியில் மீட்க முடியும், தீயின் தாக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது, தீ எந்த திசையை நோக்கி வேகமாகப் பரவுகிறது போன்றவற்றை உடனே கண்டறிந்து, அதனடிப்படையில் விரைந்து செயல்பட முடியும் என தமிழக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ட்ரோன்களை கையாளுவது தொடா்பாக தீயணைப்புத் துறை படை வீரா்களுக்கு தமிழ்நாடு ஆளில்லாத விமானக் கழக வல்லுநா்கள் மே மாதம் முதல் பயிற்சி அளிக்கவுள்ளனா். இந்த ட்ரோன்கள் மூலம் மனிதா்கள் செல்ல முடியாத தீ விபத்து பகுதிகள், புகை மூட்டம் அதிகமுள்ள பகுதிகள், அடுக்குமாடி கட்டடங்கள், மலைப் பகுதிகளில் தீயணைப்புத் துறை விரைந்து செயல்பட முடியும்.

இந்த ட்ரோன்கள் தொடா்ச்சியாக 30 நிமிடம், 3 கிலோ மீட்டா் தொலைவு வரை பறக்கும். இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் ‘எச்.டி. 4 எக்ஸ் ஜூம்’ கேமரா மூலம் துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it