ஐபிஎல் ஏலம்: ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு எடுத்து பஞ்சாப் அணி..!
15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது.
இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்கியது. முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் எடுக்க ராஜஸ்தான் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் போட்டி ஏற்பட்டது. ஷிகர் தவானை பஞ்சாப் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.