ஊர் சுற்ற பணம் வேண்டும்.. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடி !

ஊர் சுற்ற பணம் வேண்டும்.. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடி !

ஊர் சுற்ற பணம் வேண்டும்.. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடி !
X

சொகுசு வாழ்க்கைக்கு அப்பாவி மூதாட்டியிடம் பணம் பறித்த காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறை அருகே சுடுகாட்டில் கடந்த மாதம் 28ஆம் தேதி காளியம்மாள் (65) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பதுபோல் பைக்கில் ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் வந்தனர்.

மூதாட்டி அருகில் சென்ற அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காளியம்மாளின் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அந்த பெண் ஹெல்மெட் அணிந்த வாகனத்தை ஓட்ட அந்த ஆண் பின்னால் அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vx

இது குறித்த புகாரில தனிப்படை போலீசார் விசாரணை யில் நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என தெரியவந்தது. அதன்படி வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (20), கோவை சுங்கம் பைபாஸ் ரோடு ஸ்ரீநகர் முதல் வீதியை சேர்ந்த தேஜஸ்வினி (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. காதலர்களான அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார்களாம்.

அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. பிரசாத் மொபைல் ஆப் மூலமாக பணம் இழந்தார். இதனால் ஏற்பட்ட கடனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை தனது காதலியிடம் பிரசாத் கூற கடனையும் அடைந்து சொகுசாகவும் வாழ கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். காதலியோ இதனை தடுக்காமல் திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டி தற்போது அவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it