மாம்பலம் ரயில் நிலையத்தில் கணவன் மனைவி தற்கொலை..!!

மாம்பலம் ரயில் நிலையத்தில் கணவன் மனைவி தற்கொலை..!!

மாம்பலம் ரயில் நிலையத்தில் கணவன் மனைவி தற்கொலை..!!
X

ருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 41) தொழில் அதிபர். இவரது மனைவி சசிகலா(வயது 38). கடந்த சில மாதங்களாக இவர் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மாம்பலம் ரயில் நிலையம் 4-வது நடைமேடை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அதிக கடன் தொல்லையால் சதிஷ்குமார் மற்றும் அவரது மனைவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Story
Share it