இந்தி திணிப்பு : பிரபல நடிகர்கள் காரசார விவாதம்!!

இந்தி திணிப்பு : பிரபல நடிகர்கள் காரசார விவாதம்!!

இந்தி திணிப்பு : பிரபல நடிகர்கள் காரசார விவாதம்!!
X

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும், கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிற்கும் இந்தி திணிப்பு குறித்து ட்விட்டரில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

கே.ஜி.எஃப் படம் குறித்து பேசிய நடிகர் கிச்சா சுதீப், கன்னடத்தில் பான் இந்தியா படம் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள், நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன், இந்தி இனி தேசிய மொழி அல்ல என்றார்.

இந்தி தான் நமது தேசிய மொழி. உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள்? என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.

degn sudeep

அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சுதீப், ”நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா என்று கேட்டிருந்தார்.

அதற்குநீங்கள் என் நண்பர். தவறான புரிதலை நீக்கியதற்கு நன்றி. நான் எப்போதுமே சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைக்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மொழிபெயர்ப்பில் பிழையாகியிருக்கலாம் என்றார் அஜய் தேவ்கன்.


அவரின் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் சுதீப், நான் உங்களை குறை சொல்லவில்லை அஜய் தேவ்கன் சார். ஆக்கபூர்வமான காரணத்திற்காக உங்களிடமிருந்து ஒரு ட்வீட் வந்திருந்தால் அது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும். அன்பும் வாழ்த்தும்என்று கூறியிருக்கிறார்.

newstm.in

Next Story
Share it