கொட்டும் கனமழை.. வெள்ளப்பெருக்கு- 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
நகர் பகுதிகளில் கூட சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையும் தொடர்ந்ததால் கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் 14, 15, 16 ஆகிய தேதிகள் வரை மேலும் 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி (திங்கட்கிழமை ) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கோதாவரி நதியில் இருந்து நீர் அதிகமாக வெளியேறுவதால், மகாராஷ்டிர மாநிலத்தில் கோதாவரி நதியின் நிலவரம் குறித்து கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in