வெப்பத்தில் தகிக்கும் திருச்சி – 6 மாவட்டங்களில் வெயில் சதம்!!

வெப்பத்தில் தகிக்கும் திருச்சி – 6 மாவட்டங்களில் வெயில் சதம்!!

வெப்பத்தில் தகிக்கும் திருச்சி – 6 மாவட்டங்களில் வெயில் சதம்!!
X

தமிழ்நாட்டில் நேற்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிறது.

சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது.

heat2

இந்த நிலையில், மீண்டும் வெயில் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவானது.

கரூர் பரமத்தியில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரையில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 102.7 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருத்தணியின் 102.2 ஃபாரன்ஹீட்டும், வேலூரில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it