கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
X

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை விடுதியில் உணவு உட்கொண்ட மாணவிகள் 9 பேருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவிகள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - 9 பேர் சிகிச்சைக்கு  அனுமதி | Tanjore Dormitory students goosebumps 9 admitted for treatment |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...
இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு ஒவ்வாமை காரணமாக மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தியெடுத்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it