1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- குட் நியூஸ்.. விரைவில் தனி தாலுகா, 3 லட்சம் பட்டா: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..!

#BREAKING:- குட் நியூஸ்.. விரைவில் தனி தாலுகா, 3 லட்சம் பட்டா: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..!


தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி 2022 - 2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (6-ம் தேதி) மீண்டும் கூடியது. இதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கேள்வி நேரமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை விரைவில் தனி தாலுக்காவாக செயல்படத் தொடங்கும். 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

வேளாண் துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “வேளாண் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதேபோல், தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “விவசாயிகள் பாதிக்காத வகையில் தொழில் பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மீன்பிடி துறைமுகம் தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

Trending News

Latest News

You May Like