மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன்..!

மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன்..!

மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன்..!
X

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதம் மார்ச் 21-ம் தேதி முதல் இம்மாதம் ஏப்ரல் 20-ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50/ வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படவுள்ளது.

மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500, அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்படவுள்ளது.

மெட்ரோ பயண அட்டை வாங்கி, அதில் குறைந்தபட்ச தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கும் மார்க் மெட்ரோ சார்பாக பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு பரிசு கூப்பன் திட்டங்கள், பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் அடுத்த மாதமும் தொடரும் என்றும் அடுத்த மாதத்திற்கான குலுக்கல் (21.04.2022–20.05.2022) மே 21, 2022 அன்று நடத்தப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Next Story
Share it