1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஆர்ஜித சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஆர்ஜித சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு..!

ஏழுமலையானை தரிசிக்க, திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை முதல் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (ஆக.24ம் தேதி) காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம். மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like