1. Home
  2. விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் நியமனம்..!!

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் நியமனம்..!!

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்த்தனே ஒட்டுமொத்த அணிகளின் உயர்செயல்பாட்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் பெயர் அடிபட்டுவந்த நிலையில், அவரையே அணியின் தலைமைப் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் வரும் டி20 உலக கோப்பை தொடருடன் பதவிலியிலிருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like