1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்; கனமழையால் 25 பேர் உயிரிழப்பு..!!

வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்; கனமழையால் 25 பேர் உயிரிழப்பு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2,585 கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 21,884 பேரை மீட்டுள்ளனர். அங்குள்ள திமா ஹசாவோ மாவட்டம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள சாங்குராய் மற்றும் படியா கிராமங்கள் முழுமையாக நீரில் சூழப்பட்டுள்ளதால், இந்த இரு கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரம்மபுத்திரா, கோபிளி, திசாங் ஆகிய நதிகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளன.

Trending News

Latest News

You May Like