1. Home
  2. விளையாட்டு

டைமண்ட் லீக் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர்..!!

டைமண்ட் லீக் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர்..!!

இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

நீரஜ் சோப்ரா, லொசேன் லீக்கை வெல்வதன் மூலம் டைமண்ட் லீக் மீட்டிங் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை சாதனையை உருவாக்கி உள்ளார். இவர் தனது முதல் முயற்சியில், 89.08 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை புரிந்தார்.

Neeraj-chopra

வெற்றி குறித்து நீரஜ் சோப்ரா கூறும்போது, “இன்றைய எனது வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 89 மீ எறிவது ஒரு சிறந்த சாதனையாகும். காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் தான் என்னால் இதனை செய்ய முடிந்தது. தற்போது நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்க்க வேண்டியிருந்ததால் இன்று விளையாடும் போது என்னிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது” என்று கூறினார்.

இந்த வெற்றி மூலம் நீரஜ் சோப்ரா வருகிற செப்டம்பர் மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சூரிச்சில் நடைபெறும் டைமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தகுதியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா படைத்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீரஜ்சோப்ரா தர வரிசை பட்டியலில் 15 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த நிலையில் நேற்று நடந்த போட்டியின் மூலம் அவர் கூடுதலாக 8 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நீரஜ்சோப்ராவுக்கு அடுத்தபடியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ்ச் 85.88 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 83.72 மீட்டர் எறிந்து 3வது இடத்தையும் பிடித்தனர்.


Trending News

Latest News

You May Like