1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு! விசாரணைக் கைதி உயிரிழப்பு!!

பரபரப்பு! விசாரணைக் கைதி உயிரிழப்பு!!


சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரசைவாக்கம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு அடி நீளமுள்ள பட்டாக்கத்தி மற்றும் 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும், ரமேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (25) என்பது தெரியவந்தது.

பெயிண்டர் வேலை செய்து வரக்கூடிய ரமேஷ் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

பரபரப்பு! விசாரணைக் கைதி உயிரிழப்பு!!

மேலும் குதிரை ஓட்டுபவரான விக்னேஷ் மீது மெரினா, பட்டினம்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடும் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

இதனையடுத்து தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு, இரண்டு பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ,வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு! விசாரணைக் கைதி உயிரிழப்பு!!

விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்த தகவல் அறிந்து துறைரீதியிலான விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

சந்தேகமான முறையில் இறந்த விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூராய்வு இன்று நடைபெற உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like