மீண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்!!

மீண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்!!

மீண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்!!
X

திண்டிவனம் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (28) என்பவர் அவருடைய அக்கா மோகனா உடன் திண்டிவனம் தேவாங்கர் தெருவில் உள்ள மருத்துவரை பார்க்க சென்றனர்.

அவர்கள் ஓட்டிச்சென்ற மின்சார ஸ்கூட்டர் மருத்துவமனைக்கு எதிரே சாலையோரம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மின்சார ஸ்கூட்டர் வெப்பம் தாங்காமல் பேட்டரியில் இருந்து ஆசிட் கசிந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

fire

இந்த விபத்தின் போது அருகில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பற்றியது. பின்னர் இதுகுறித்து அந்த வழியாக வந்த திண்டிவனம் சப்-கலெக்டர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் மின்சார ஸ்கூட்டர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அண்மைக்காலமாக மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்து எரிவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்தற்போது மீண்டும் ஒரு மின்சார ஸ்கூட்டர் எரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it