கல்வித்துறை அலட்சியம்.. 3,600 ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாமல் தவிப்பு..!

கல்வித்துறை அலட்சியம்.. 3,600 ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாமல் தவிப்பு..!

கல்வித்துறை அலட்சியம்.. 3,600 ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாமல் தவிப்பு..!
X

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. இதில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள், கூடுதல் பணியிடங்கள் தேவைப்பட்ட பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர். இந்த வகையில், மாநிலம் முழுவதும் சுமார் 3,600 ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

அந்த ஆசிரியர்களின் பணி நியமன அரசாணை உள்ளிட்ட விவரங்களை கருவூல கணக்குத் துறையின் மென்பொருளில் பதிவேற்றவில்லை.

இதனால் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் கிடைக்கவில்லை. அதேபோல் ஏப்ரல் மாத ஊதியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறும்போது, “உபரி ஆசிரியர்களை கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளில் பணி நிரவல் செய்தனர்.

தற்போதைய சூழ்நிலையில் கருவூல கணக்குத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட மென்பொருளில், பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது அளிக்கப்பட்ட பணி நியமன அரசாணை உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றினால் மட்டுமே ஊதியம் பெற முடியும்.

ஆனால் அதை கல்வித்துறை அதிகாரிகள் செய்யாததால், பணி நிரவலில் சென்ற ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாத நிலை உள்ளது. அதை உடனடியாக சரிசெய்து ஊதியம் வழங்க வேண்டும்’ என்றார்.

Next Story
Share it