கிரெடிட் கார்டு வேண்டாமா? - 7 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பணம் கிடைக்கும் !!

கிரெடிட் கார்டு வேண்டாமா? - 7 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பணம் கிடைக்கும் !!

கிரெடிட் கார்டு வேண்டாமா? - 7 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பணம் கிடைக்கும் !!
X

ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு குறித்த புதிய வழிகாட்டல்கள் 2022, வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த புதிதகள் கிரெடிட் கார்டு வழங்கும் ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட வங்கிக்கும், வங்கிசாராத நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த வழிக்காட்டுதல்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவும் வங்கி நிர்வாகத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கும் வகையில் உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று வங்கிக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை அடுத்த 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அந்த கார்டில் ஏதேனும் பணம் செலுத்துவது இருந்தாலும் அதை முடிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அது குறித்த தகவலை கார்டு வைத்திருந்தவருக்கு மின்அஞ்சல், எஸ்எம்எஸ், செல்போன் மூலம் கார்டு வழங்கிய நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

money send

மேலும், வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று திரும்ப ஒப்படைக்க விரும்பினால் அந்தவிண்ணப்பத்தை வங்கிகள், நிதி நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.500 அபராதமாக கார்டு ரத்து செய்யும்வரை வழங்க வேண்டும்

ஒரு கிரெடிட் கார்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால், கார்டு வைத்திருப்போருக்கு தகவல் அளித்துவிட்டு, கார்டை ரத்து செய்யும் பணியை வங்கிகள் தொடரலாம். தகவல் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் கார்டு வைத்திருப்போரிடம் இருந்து எந்தத் தகவலும் வராவிட்டால், அந்த கார்டை வங்கிகள், நிறுவனங்கள் ரத்து செய்யலாம்.

கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் அந்த கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் அதை செயல்பாட்டுக்கு கொண்டுவரும்போது, வாடிக்கையாளருக்கு வரும் ஓடிபி அடிப்படையில்தான் செயல்படுத்த வேண்டும்.

money send

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு கார்டுக்குரிய வட்டி வீதம், பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் விதிக்கப்படும் வட்டி குறித்து இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எந்தவகையில் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை உதாரணங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகளுக்கு பில் செலுத்தும்போது குறைந்தபட்ச கட்டணம், நிபந்தனைகள், வட்டி வீதம் ஆகியவற்றை வங்கிகள் விளக்க வேண்டும். கிரெடிட் கார்டு வழங்கும்போது எந்தவிதமான மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வட்டி இருந்தால், அதை கடன் செலுத்தும் தொகையில் கழிக்கக் கூடாது, என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it