1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் குறைகிறதா..?

கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் குறைகிறதா..?


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, கொரோனா வைரஸ், ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல் ஆகும். கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் காட்டுகின்றன. கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அதே நேரத்தில் கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது. ஆனால் இந்த பிரச்சினை தற்காலிகமானது. அது கொரோனா தொற்று நோயுடன் தொடர்புடையது. தடுப்பூசியால் அல்ல.” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like