1. Home
  2. தமிழ்நாடு

எல்ஐசி பங்கின் விலை தெரியுமா?

எல்ஐசி பங்கின் விலை தெரியுமா?


பொதுப் பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்..சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

பங்குகள் வெளியீடு மே 4ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பங்கின் விலை 902, 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. வரும் மே 4ஆம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது.

மேலும், பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும், சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கலாம் என தெரிகிறது.

துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

எல்ஐசி பங்கின் விலை தெரியுமா?

எல்ஐசி ஐபிஓ மூலம் 5சதவீதப் பங்குகளை விற்பனை செய்து ரூ.55ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த அளவை தற்போது ரூ.21 ஆயிரம் கோடியாகக் குறைத்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடியை எந்த நிறுவனமும் ஈட்டியதில்லை. அதிகபட்சமாக பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.18,300 கோடி ஈட்டியது. எல்ஐசி ஐபிஓ வெளியிட்டால் அதுதான் பெரிதான ஐபிஓவாக இருக்கும்.

newstm.in

Trending News

Latest News

You May Like