1. Home
  2. தமிழ்நாடு

விசாரணை முடிந்து பின்வாசல் வழியாக வாடகை காரில் எஸ்கேப் ஆன இயக்குநர் ஷங்கர்!!

விசாரணை முடிந்து பின்வாசல் வழியாக வாடகை காரில் எஸ்கேப் ஆன இயக்குநர் ஷங்கர்!!


அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான இயக்குநர் ஷங்கர் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு பின்வாசல் வழியாக வாடகை காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கு விவரம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

விசாரணை முடிந்து பின்வாசல் வழியாக வாடகை காரில் எஸ்கேப் ஆன இயக்குநர் ஷங்கர்!!

விசாரணைக்காக இயக்குனர் ஷங்கர் ஆஜரானதை அறிந்த ஊடகத்தினர் அதிகளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கூடினர். விசாரணைக்காக ஷங்கர் தனது இன்னோவா காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினருக்கு கண்ணில் படாமல் அமலாக்கத்துறை அலுவலகத்தின் பின்வழியாக சென்று வாடகை காரில் அவர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் வழக்கு தொடர்பாக இயக்குனர் சங்கரை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like