மகள்கள் பாலியல் வன்கொடுமை.. ஒரு தந்தைக்கு தூக்கு.. வளப்பு தந்தைக்கு ஆயுள் சிறை !!

மகள்கள் பாலியல் வன்கொடுமை.. ஒரு தந்தைக்கு தூக்கு.. வளப்பு தந்தைக்கு ஆயுள் சிறை !!

மகள்கள் பாலியல் வன்கொடுமை.. ஒரு தந்தைக்கு தூக்கு.. வளப்பு தந்தைக்கு ஆயுள் சிறை !!
X

மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய, தாயின் 2ஆவது கணவக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனதுகுடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது தாயார், முதல் கணவரைப் பிரிந்த நிலையில் இரண்டாவதாக சங்கர் கணேஷ் (36) என்பவரை திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சிறுமியை சங்கர்கணேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டருகே வசிக்கும் முருகேசன் (50), முருகேசன்(47) ஆகியோரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

df

பின்னர் இந்த தகவலை அறிந்த தாய் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக காங்கயம்அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்சோ பிரிவின் கீழ்வழக்கு பதிந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி சுகந்தி தீர்ப்புஅளித்தார். அதில், சங்கர் கணேஷ் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து குற்றவாளிகள் மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் சென்னை கிண்டியில் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


newstm.in

Next Story
Share it