இந்த மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,366 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கீர்த்தி உத்தரவட்டுள்ளார்.
அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு கட்டாயம் அபாராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறப்பு மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் உள்ள மருத்துவரை அணுகுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.