1. Home
  2. விளையாட்டு

சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நியுசிலாந்து அணி வீரர் டெவான் கான்வேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conway

நேற்று மாலை லண்டனுக்கு வந்த நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Conway

மேலும், பாதிக்கப்பட்ட மூவரும் லீட்ஸ் மைதானத்திற்கு தனித்தனியாகச் செல்வார்கள் என்றும் செவ்வாய்கிழமை பயிற்சியில் இணைவார்கள் என்றும் வியாழன் அன்று நடைபெறும் கடைசி டெஸ்ட போட்டியில் விளையாடுவார்கள் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Trending News

Latest News

You May Like