மாணவர்களிடையே மோதல்.. 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!

மாணவர்களிடையே மோதல்.. 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!

மாணவர்களிடையே மோதல்.. 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!
X

அம்பாசமுத்திரம் அருகே, பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it