1. Home
  2. தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்; கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால் என்றார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like