1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகத்துக்கு எதிரான கட்சியாக திமுகவை சித்தரிக்க முயற்சி -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு..!!

ஆன்மீகத்துக்கு எதிரான கட்சியாக திமுகவை சித்தரிக்க முயற்சி -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு..!!


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம். இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அவர் சன்னிதானத்துக்கும், சடங்குகளுக்கும் பிரச்சினை இல்லாமல் முதல்வர் நடுநிலையோடு தீர்வு காண்பார்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் எனக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “திமுக ஆன்மீகத்துக்கு எதிராக இருப்பது போல சிலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழி நடத்திய ஆட்சி, மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இது திராவிட மாடல் ஆட்சி. யாருக்கும் ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.” என்றார்.

Trending News

Latest News

You May Like