1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS:- தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கனடா கவுரவம்.. நன்றி தெரிவித்து ரஹ்மான் உருக்கம்..!

#BIG NEWS:- தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கனடா கவுரவம்.. நன்றி தெரிவித்து ரஹ்மான் உருக்கம்..!

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை, கனடா நாட்டின் மார்கம் என்ற நகரில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்டியிருக்கிறார் அந்த நகரின் மேயர். இந்த சம்பவம், இந்திய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.


அதில், “என் வாழ்க்கையில் இதனை நான் கற்பனை கூட செய்ததில்லை.

இதற்காக மார்கம் மேயர், கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா நாட்டு மக்கள் ஆகியோருக்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் எனது பெயரில்லை; அதன் அர்த்தம் இரக்கம். இரக்கம் என்பது நம் எல்லோருக்கும் பொதுவான கடவுளின் குணம்.

இந்தப் பெயர் கனடா மக்களுக்கு அமைதி, வளம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கும். இந்தியாவில் உள்ள சகோதர - சகோதரிகள் எனக்கு அளித்த அன்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

#BIG NEWS:- தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கனடா கவுரவம்.. நன்றி தெரிவித்து ரஹ்மான் உருக்கம்..!
100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடுகின்ற, எனக்கு உத்வேகம் அளிக்கின்ற, என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி. நான் கடலில் சிறிய துளி போன்றவன். இது எனக்கு மேலும் பணிபுரிய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

எனக்கு சோர்வு ஏற்பட்டாலும், இதன் காரணமாக நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும், நிறைய மக்களை ஈர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like