முதல்வர் ஸ்டாலினை கலாயத்த சி.வி.சண்முகம்..!!

முதல்வர் ஸ்டாலினை கலாயத்த சி.வி.சண்முகம்..!!

முதல்வர் ஸ்டாலினை கலாயத்த சி.வி.சண்முகம்..!!
X

சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.இந்த பொதுக்கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் தலைமை தாங்கினார். இதில் அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே மின் வெட்டு அதிகமாக உள்ளது. முதல்வர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதில் டார்ச் அடித்துக் கொண்டு ஒருவர் செல்கிறார். யார் என்று பார்த்தால் அவர்தான் தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திரபாபு. முதல்வர் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு இருக்கிறது. இதற்கு மேல் வேறு எந்த உதாரணமும் தேவை இல்லை. இதை சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள். வழக்குப் போடுவேன் என்கிறார்கள்.

அனிதா மரணத்தை அரசியலாக்கி சுயநலத்துக்காக உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்ற திமுகவின் ஒரு ஆண்டு ஆட்சியில் நீட்டுக்காக 20 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டாவது சுரங்க முடிவடையாத நிலையில் மூன்றாவது சுரங்கத்திற்கு வந்து விட்டார்கள். தினக்கூலியாக வேலை தருகிறேன் என்கிறார்கள். ஆனால் வடநாட்டவருக்கு வேலை தருகிறார்கள். இரண்டாவது சுரங்கத்திற்காக 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி இருக்கிறது. ஆனால் மூன்றாவது அரங்கத்திற்காக நிலம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? நிலம் எடுக்கும்போது வழிகாட்டி மதிப்பில் பணம் தராமல் சந்தை மதிப்பிற்கு பணம் தர வேண்டும்.

திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். திராவிட மாடல் என்றால் என்ன தெரியாத ஒன்றை கவர்ச்சிகரமாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு இவையெல்லாம் சேர்ந்ததுதான் திராவிடம். இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு விட்டது. திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா சென்னை என்று இருந்ததை திராவிட நாடு என்று மாற்றாமல் தமிழ்நாடு என்றுதான் மாற்றினார்.
கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தண்ணீர் தண்ணீர் தருவதில்லை. ஆந்திரா அவ்வப்போது முரண்டு பிடிக்கிறது. திராவிடன் என்றால் ரன் அவே, ஓடிப் போனவன் என்று பொருள். திராவிடன் என்பது தூய சமஸ்கிருத வார்த்தை. திராவிடன் என்று சொல்லி இந்த மக்களை ஏமாற்றுவது திமுகவிற்கு கைவந்த கலை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றல்லை. நாட்டிலுள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். அனைத்து வங்கிகளிலும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி விட்டு, கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்தார்கள். அதற்கும் பல்வேறு விதிமுறைகளை வைத்தார்கள். நகைக்கடன் வைத்தது 50 லட்சம் பேர். ஆனால் தள்ளுபடி 14 லட்சம் பேருக்கு மட்டுமே.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது தலைமைக்கு நிர்வாகம் தெரியவில்லை. தமிழ்நாடு முதல்வர் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குகிறார்கள். இந்த பட்ஜெட்டில் ரூ. 95 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடன் வெறும் மூன்றேகால் லட்சம் கோடி மட்டுமே” என பேசினார்.

Next Story
Share it