1. Home
  2. தமிழ்நாடு

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!!

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!!


திருவள்ளூர் அருகே தொண்டையில் தேங்காய் சிக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரின் மூன்று வயது குழந்தை சஞ்சீஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, சமைப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டு ஒன்றை எடுத்து குழந்தை சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!!

அங்கு குழந்தைக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொண்டையில் தேங்காய் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like

News Hub