சிறையில் உள்ள கணவனுக்கு சிறப்பு சலுகை தர சிறை அதிகாரியிடம் பேரம் பேசிய பப்ஜி மதன் மனைவி?

சிறையில் உள்ள கணவனுக்கு சிறப்பு சலுகை தர சிறை அதிகாரியிடம் பேரம் பேசிய பப்ஜி மதன் மனைவி?

சிறையில் உள்ள கணவனுக்கு சிறப்பு சலுகை தர சிறை அதிகாரியிடம் பேரம் பேசிய பப்ஜி மதன் மனைவி?
X

ஆபாசமான வீடியோக்கள் பதிவிட்ட பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள கணவனுக்கு அங்கே சிறப்பு சலுகைகளுடன் சொகுசு வாழ்க்கைக்காக சிறை அதிகாரியிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ளா ஆடியோவில் நான் கிருத்திகா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் பெண், கொரோனா இல்லாம அவரை நல்லாப் பாத்துக்கோங்க. நான் பணம் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன். 3 லட்சம் என்பதால் கொஞ்சம் லேட் ஆகுது என்று கூறுகிறார். மறுமுனையில் உள்ள நபர் குறித்து தெரியவில்லை. சார் சொன்னார், நல்லா இருக்கார் போன்ற பதில்கள் வருவதால் சிறைத்துறை சார்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

பெங்களூர் சிறையில் சொகுசு வாழ்க்கைக்காக லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மற்றும் இளவரசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பப்ஜி மதனின் மனைவி பேரம் பேசும் ஆடியோ தமிழ்நாடு, கர்நாடாகா உள்ளிட்ட அனைத்து சிறைத்துறை நிர்வாகங்கள் பற்றிய கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it