1. Home
  2. தமிழ்நாடு

கவனம்.. தமிழக இளைஞர்களை வட்டமிடும் வடமாநில மோசடி கும்பல் !

கவனம்.. தமிழக இளைஞர்களை வட்டமிடும் வடமாநில மோசடி கும்பல் !


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி நகரில் சக்தி நாதன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு, வேலை இல்லாத காரணத்திற்காக Naukri என்ற இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அதில் இருந்து சக்தி நாதன் முகவரிக்கு போலந்து நாட்டில் வேலை அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துள்ளது. இதனை நம்பிய அவர், அதில் தொடர்புடைய நபரிடம் பேசியுள்ளார். அவர்கள் கூறியப்படி சக்தி நாதன் சுமார் 7,14,035 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கவனம்.. தமிழக இளைஞர்களை வட்டமிடும் வடமாநில மோசடி கும்பல் !

இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததை சந்தி நாதன் உணர்ந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 11 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இவ்விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த நவீன் (24) குமார் மற்றும் குரூப் சந்து(31) ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர். மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே போலியாக மின்னஞ்சல் மூலம் அப்பாயின்மென்ட் ஆர்டர் அனுப்பி பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

கவனம்.. தமிழக இளைஞர்களை வட்டமிடும் வடமாநில மோசடி கும்பல் !

பொதுமக்கள் யாரும் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் இதுபோன்று இணையதளத்தில் வரும் போலியானா வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி யாரும் முன்பணம் தரவேண்டாம் என்றும் என்றும் அறிவுறுத்தினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like