1. Home
  2. தமிழ்நாடு

அலர்ட்! 5 நாட்களுக்கு 15 மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும்!!

அலர்ட்! 5 நாட்களுக்கு 15 மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும்!!


15 மாநிலங்களுக்கு வரும் ஐந்து நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை நிலவும்.

இதில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 43 முதல் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

அலர்ட்! 5 நாட்களுக்கு 15 மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும்!!

ஹரியானா, பஞ்சாப், டெல்லி, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like