1. Home
  2. தமிழ்நாடு

9ம் கட்ட ஊரடங்கு! இந்த விஷயங்களுக்கு எல்லாம் புதிதாக அனுமதி!

9ம் கட்ட ஊரடங்கு! இந்த விஷயங்களுக்கு எல்லாம் புதிதாக அனுமதி!


தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு மேலும் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் படி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும்.

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை. வாரச்சந்தைகள், மார்க்கெட்டுகள் அரசின் வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்கலாம்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்ளை திறக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தடை தொடரும்.
கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் பார்வையிட தடை . அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது.
மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானசேவை தொடரும்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தடை நீட்டிப்பு.
உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
பார்சல் சேவைக்கு மட்டும் இரவு 10 மணி வரை அனுமதி.
திரைத்துறை படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி.
சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்கலாம்.
தமிழகத்தில் நிலவி வரும் பாதிப்பு மற்றும் அதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன்

முதல்வர் எடப்பாடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like