குடிபோதையில் வந்த சிறுவனால் கருவில் இருந்த 9 மாத சிசு மரணம்..!
குஜராத் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் ரவியின் பைக்கின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.