ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி..!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் லட்சகணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். முக்கியமான வழித்தடங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது.
இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது சங்ககிரியில் ஓடும் பேருந்தில் தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு.