1. Home
  2. தமிழ்நாடு

பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி..!அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!

Q

முத்தம்பள்ளி கங்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலெட்சுமி. தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 9 மாத நவநீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான சேலத்தில் நடைபெற்ற திருவிழாவுக்காக சென்றுவிட்டு அங்கிருந்து கோவை செல்வதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அரசுப் பேருந்தின் முன் பக்க கதவை அடைக்குமாறு ராஜதுரை நடத்துநரிடம் கூறினாராம். ஆனால், நடத்துநர் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். இந்த நிலையில், பேருந்தானது சங்ககிரி அருகே உள்ள கத்தேரி வளையக்காரனூர் பகுதியில் சென்றபோது திடீரென ராஜதுரை கையில் இருந்த குழந்தை நவநீஷ் பேருந்தில் இருந்து கீழே விழுந்தது. இதில், குழந்தை பலத்த காயமடைந்து உயிரிழந்தது.

இதுகுறித்து தேவர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநர் சிவமணி, நடத்துநர் பழனிசாமி ஆகியோரை அரசுப் போக்குவரத்து கழக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like