1. Home
  2. தமிழ்நாடு

95 சதவீத பணியை முடிச்சுட்டோம்.. இனி பாதிப்பு இருக்காது: மேயர் பிரியா..!

95 சதவீத பணியை முடிச்சுட்டோம்.. இனி பாதிப்பு இருக்காது: மேயர் பிரியா..!

கடந்த ஆண்டு மழையால் அதிக பாதிப்புகள் இருந்த நிலையில், 95 சதவீத வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இனி பாதிப்பு இருக்காது என, சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது; "கடந்த ஆண்டு மழை வெள்ளத்தினால் சென்னை மாநகர் அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு பாதிப்பு இந்த ஆண்டு இருக்கக் கூடாது என்பதற்காக மழைநீர் வடிகால் பணிகள் முக்கியமான பணிகளாக நடைபெற்று முடிந்துள்ளது.


முதல்வர் அறிவுறுத்தல் படி, மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொண்டோம். மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல்வர் அவர்கள் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பின் போது மழைநீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த வருடம் அந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கக்கூடாது என எண்ணி மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு பின் மழையினால் அதிக அளவு பாதிப்பு இருக்காது என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like