1. Home
  2. தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : புதுச்சேரியில் 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி..!

1

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  

தேர்வு முடிவுகள் குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6,566 மாணவர்களும் 7,446 மாணவிகளும் ஆக மொத்தம் 14,012 மாணவர்கள் தேர்வு எழுதினர். வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12,948 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் 5,867 மாணவர்களும் 7,081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 92.41 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளில்  92.41 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 85.35 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like