தவறான பழக்கத்தால் ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரிகுண்டாவில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அது கொலை என தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் 9 பேருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர்களை உயிருடன் கிணற்றில் தள்ளி இளைஞர் கொலை செய்தார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளி மேற்கு வங்கத்தை சேர்ந்த என்பவரை 72 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத், அவரது மனைவி நிஷா மற்றும் குடும்பத்தினர் 6 பேர் ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளாக தெலங்கானா வாரங்கலில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த மசூத்திற்கு, பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர்.
அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற சஞ்சய் குமாருக்கும் நிஷாவின் சகோதரி ரபிகாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தனது மூன்று பிள்ளைகளுடன் சஞ்சயுடன் சேர்ந்து ரபிகா குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரபிகாவின் மகளுடன் சஞ்சய் தவறாக பழக முயன்றார்.
இதனை கவனித்த ரபிகா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது மகளுடன் தவறான நோக்கத்துடன் பழகுவதை கண்டித்தார். இதனால், ரபிகாவை கொலை செய்ய சஞ்சய் திட்டமிட்டார்.
அதன்படி கடந்த மார்ச் 7ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு ரயிலில் அழைத்துச் செல்லும்போது ரபிகாவை கொலை செய்துவிட்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார். நிஷா, மசூத் ஆகியோர் சஞ்சயிடம் ரபிகா குறித்து கேட்டனர். அவர் சமாளித்து வந்த நிலையில் உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக நிஷா மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், நிஷா உட்பட அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டார். அப்போது, மசூதின் பெரிய மகனுக்கு மே 21ஆம் தேதி பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்பதற்காக சென்ற சஞ்சய், குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து மசூத் குடும்பத்தினர், பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் இளைஞர்கள் 3 பேருக்கும் கொடுத்தார்.
இதையடுத்து, இரவுவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது மசூத் குடும்பத்தினர் மற்றும் பீகார் இளைஞர்கள் என 9 பேரையும் கோணிப் பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் தெலங்கானா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் தவறான பழக்கம் காரணமாக பெண்ணை கொலை செய்துவிட்டு அதனை மறைக்க மேலும் 9 கொலைகள் செய்த சஞ்சய்க்கு நீதிமன்றம் ‘தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
newstm.in