ஓமன் கடலில் தத்தளித்த 9 இந்தியர்கள் மீட்பு..!
கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.
ஆனால், துறைமுகத்திற்கு சென்று சேர்வதற்கு முன்னரே இந்த கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் இலங்கையை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்வர்கள் 13 பேர் மாலுமிகளாக பயணித்திருக்கின்றனர். எனவே இந்த 13 பேரின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்திற்கானது. இப்படி இருக்கையில் கப்பல் தலைக்கீழாக கவிழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 இந்தியர்கள், ஒரு இலங்கையை சேர்ந்தவர் என 9 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். . இந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமானதாக, ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்திருந்த நிலையில், 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஓமனுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
.png)