கோவை அரசுப்பள்ளியில் மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை..!
கோவை அரசுப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். அப்போது, மாணவிகள் சிலர், தங்களுக்கு ஆசிரியர் நடராஜன் என்பவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.
இது குறித்து பிற ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரளிக்க, காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். இதில், 54 வயதான ஆசிரியர் நடராஜன், மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்திருப்பதாகக் கூறி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு ஆகியோருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.