1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் சோகம்..!! கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்தவர்கள், வீட்டிற்கு சென்றதும் மயங்கி விழுந்துள்ளனர். உறவினர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அந்த பகுதியில் சோதனை நடத்திய போது, சாராயம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்த மேலும் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடற்கரையோரம் யாராவது மயங்கி உள்ளனரா என காவல்துறையினரும், பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேலும் சிலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like