பாட்டில் மூடி சிக்கி 8 மாத குழந்தை பலி..! சந்தேகத்தில் போலீஸ்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பொக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் நிசார். இவருக்கு 8 மாதத்தில் முகமது இபாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையின் தொண்டையில் பால் பாட்டில் மூடி சிக்கி உள்ளது.
வீட்டின் வளாகத்தில் இருந்த பாட்டிலை எடுத்து விளையாடி உள்ளது. அப்போது பாட்டிலில் இருந்த மூடியை கழற்றி வாயில் வைத்த போது அந்த மூடி, தெரியாமல் குழந்தையின் தொண்டைக்குள் சிக்கியுள்ளது. மூச்சுத்திணறி மயங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடற்கூறாய்வு செய்தபோது அந்த மூடி அகற்றபட்டுள்ளது.
நிசாரின் முதல் மகனும் இதே போல தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.